ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாட்டை வந்தடைந்தார்

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாட்டை வந்தடைந்தார்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 8:03 pm

மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றிரவு நாட்டை வந்தடைந்தார்.

ஐ.நா. செயலாளர் நாயகத்தின் இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை அவர் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் காலியில் நடைபெறவுள்ள ”நல்லிணக்கமும் ஒருங்கிணைந்து வாழ்தலும் – இளைஞர்களின் வகிபாகம்” எனும் தொனிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள பான் கீ மூன், மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளையும் பார்வையிடவுள்ளார்.

அத்துடன், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளையும் சந்திக்கவுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்