இரவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இறக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

இரவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இறக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

இரவில் அறுவை சிகிச்சை மேற்கொண்டால் இறக்கும் வாய்ப்பு அதிகம்: ஆய்வில் தகவல்

எழுத்தாளர் Bella Dalima

31 Aug, 2016 | 3:46 pm

இரவில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் போது நோயாளிகள் இறக்கும் வாய்ப்பு இரு மடங்கு அதிகம் என கனடா நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பொது மருத்துவமனையொன்றில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், கடந்த ஆண்டு மார்ச் மாதம் வரை நடைபெற்ற அறுவை சிகிச்சைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த அறுவை சிகிச்சைகள் நடைபெற்ற நேரம், காலை 7 மணியிலிருந்து மாலை 3.29 வரையிலும் ஒரு பிரிவாகவும், மாலை 3.30 முதல் இரவு 11.29 வரை ஒரு பிரிவாகவும், இரவு 11.30 முதல் காலை 7.29 வரை மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்பட்டது.

5 ஆண்டு காலகட்டத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட, மருத்துவமனையில் தங்கியிருந்த 40,044 நோயாளிகளில் 33,942 பேருக்கு 41,716 அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்த அறுவை சிகிச்சைகளில், 352 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

அவர்களில், பகல் நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்களைவிட, இரவு நேரத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டவர்கள் 2.17 மடங்கு அதிகமான அளவில் உயிரிழந்தனர்.

மேலும், பகலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களைவிட, மாலையில் அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் இறக்கும் வாய்ப்பு 1.43 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரிய வந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்