ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் தொடர்பில் தீர்மானம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் தொடர்பில் தீர்மானம்

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் தொடர்பில் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2016 | 7:09 am

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் 65 வருட பூர்த்தி மாநாட்டில் கலந்து கொள்ளாதவர்கள் மற்றும் அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் மத்திய செயற்குழு தீர்மானம் எடுக்கும் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

மாநாடு நிறைவடைந்ததன் பின்னர் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும் இம்முறை நடத்தப்படவுள்ள மாநாட்டிநாட்டிற்கான அனைத்து செயற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அதற்கமைய வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட நாட்டின் அனைத்து பாகங்களிலிருந்தும், இந்த நிகழ்வில் ஏராளமானவர்கள் பங்கேற்பார்கள் எனவும் அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் ஏற்பாட்டாளர்களுக்கும் இந்த மாநாட்டிற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்