மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி

மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி

மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 4:01 pm

கபாலியின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி – ரஞ்சித் கூட்டணி மீண்டும் இணைகிறது.

இத்தகவலை நடிகர் தனுஷ் அறிவித்துள்ளார்.

தனுஷின் வொண்டர்பார் பிலிம்ஸ் இப்படத்தைத் தயாரிக்கிறது.

ஷங்கரின் 2.0 படத்திற்குப் பிறகு இது ஆரம்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இப்படம் கபாலி – 2 ஆக இருக்குமோ என்கின்ற ஆவல் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

கபாலி படத்தை தாணு தயாரித்ததால் அவர் அனுமதி அளித்தால் மட்டுமே கபாலி என்கிற பெயரை வைத்து மற்றொரு படம் தயாரிக்கமுடியும்.

அல்லது ஒருவேளை இது புதிய கதை கொண்ட படமா என்றும் தெரியவில்லை.

படம் குறித்த மேலதிகத் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்