நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சஷீந்திர ராஜபக்ஸ, மொஹமட் முஸம்மில் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சஷீந்திர ராஜபக்ஸ, மொஹமட் முஸம்மில் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு

நிதிக்குற்ற விசாரணைப் பிரிவினால் சஷீந்திர ராஜபக்ஸ, மொஹமட் முஸம்மில் ஆகியோரிடம் வாக்குமூலம் பதிவு

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 6:20 pm

ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சர் சஷீந்திர ராஜபக்ஸ மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மில் ஆகியோர் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவிற்கு இன்று அழைக்கப்பட்டிருந்தனர்.

ஹோமாகம தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு அபிவிருத்தி மன்றத்தின் பணிப்பாளராக சஷீந்திர ராஜபக்ஸ இருந்தபோது இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காக ஊவா மாகாண முன்னாள் முதலமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதேவேளை, தேசிய பொறியியல் கூட்டுத்தாபனத்தின் ஆட்சேர்ப்பு தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக தேசிய சுந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளர் மொஹமட் முஸம்மிலும் பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் இன்று ஆஜராகினார்.

சுமார் ஒரு மணித்தியாலம் வாக்குமூலம் பதிவுசெய்த பின்னர் மொஹமட் முஸம்மில் அங்கிருந்து வெளியேறினார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்