நாடு முழுவதிலும் உள்ள 115 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காட்டு யானை அச்சுறுத்தல்

நாடு முழுவதிலும் உள்ள 115 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காட்டு யானை அச்சுறுத்தல்

நாடு முழுவதிலும் உள்ள 115 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காட்டு யானை அச்சுறுத்தல்

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2016 | 7:15 am

நாடு முழுவதிலும் உள்ள 115 பிரதேச செயலாளர் பிரிவுகளில் காட்டு யானை அச்சுறுத்தல் நிலவுவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மக்களின் ஒத்துழைப்பு தேவை என வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் டப்ளியூ.எ.எஸ். பத்திரன தெரிவித்தார்.

யானைகளுக்கு அமைக்கப்பட்டுள்ள நடைபாதை பகுதிகளில் மக்கள் குடியிருப்புகளை அமைப்பதாலேயே இந்த பிரச்சினை அதிகரித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய காட்டு யானைகளின் நடை பாதைகளை உரிய வகையில் திறந்து விடுவதற்கான பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் டப்ளியூ.எ.எஸ். பத்திரன குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில் காட்டு யானைகள் வருகை தருகின்ற பிரதேசத்தில் உள்ள மக்களை தௌிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்