ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஹக் செய்த மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஹக் செய்த மற்றுமொரு சந்தேகநபர் கைது

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தினை ஹக் செய்த மற்றுமொரு சந்தேகநபர் கைது

எழுத்தாளர் Staff Writer

30 Aug, 2016 | 10:48 am

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசித்து தரவுகளை மாற்றிய சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவ பகுதியை சேர்ந்த 26 வயதான, ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் கடுகண்ணாவை பகுதியை சேர்ந்த 17 வயது மாணவனொருவன் நேற்று கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

குற்றப் புலனாய்வு பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்கள் கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்