ஜனாதிபதியின் இணையத்தளம் ஊடுருவல்:  சந்தேகநபரை  நன்னடத்தைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவு

ஜனாதிபதியின் இணையத்தளம் ஊடுருவல்:  சந்தேகநபரை  நன்னடத்தைக்காக ஒப்படைக்குமாறு உத்தரவு

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 7:37 pm

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஊடுருவி, அதிலுள்ள தரவுகளை மாற்றியமைக்க முற்பட்டமைக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில், இளம் வயதுடைய பாடசாலை மாணவரை நன்னடத்தைக்காக ஒப்படைக்குமாறு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்கள் கொழும்பு கோட்டை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான பாடசாலை மாணவர் கடுகண்ணாவை பகுதியில் நேற்று கைது செய்யப்பட்டிருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய மேலுமொரு சந்தேகநபர் மொரட்டுவை பகுதியில் கைது செய்யப்பட்டதுடன், அவரை செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் கட்டளையிட்டது.

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்