மக்கள் சக்தியால் கேதேரத்மலே பிரதீபாலோக பாலர் பாடசாலைக்கு அடிப்படை வசதிகள்

மக்கள் சக்தியால் கேதேரத்மலே பிரதீபாலோக பாலர் பாடசாலைக்கு அடிப்படை வசதிகள்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 9:57 pm

தமது பிரச்சினைகளுக்குத் தீர்வை எதிர்பார்த்து இருக்கும் மக்கள் ஏராளம்.

அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கும் நோக்கிலேயே மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

ரபேவ கேதேரத்மலே பிரதீபாலோக பாலர் பாடசாலை மாணவர்கள் அடிப்படை வசதிகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இந்தப் பிரச்சினையை எவரும் அடையாளம் காணாத நிலையில், இதற்கு ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டத்தின் ஊடாக தீர்வு வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தின் ஊடாக இதன் நிர்மாணப்பணிகளை இரண்டு வாரங்களில் நிறைவு செய்ய முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

மக்களுடன் இணைந்து முன்னெடுக்கும் இந்தத் திட்டத்திற்கு வர்த்தகரான அஜித்த விஜேதுங்க நிதியுதவி வழங்கியுள்ளார்.

ஆறு திட்டங்களுக்கு அவர் நிதியுதவி வழங்கத் தீர்மானித்துள்ளதுடன், அதன் மூன்றாவது திட்டமே இதுவாகும்.

வாழ்வில் சிரமங்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட மக்கள் சக்தி தொடர்ந்தும் தயாராகவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்