ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளை இலங்கை வருகிறார்

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் நாளை இலங்கை வருகிறார்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 7:14 pm

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை (31) இலங்கை வருகை தரவுள்ளார்.

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் இந்த விஜயத்தின் போது முதலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கவுள்ளார்.

செப்டம்பர் முதலாம் திகதி ஜனாதிபதிக்கும் ஜ.நா. செயலாளர் நாயகத்திற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறவுள்ளது.

அதன் பின்னர், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் காலியில் நடைபெறவுள்ள ”நல்லிணக்கமும் ஒருங்கிணைந்து வாழ்தலும் இளைஞர்களின் வகிபாகம்” எனும் தொனிப்பொருளிலான செயலமர்வில் கலந்துகொள்ளவுள்ளார்.

செப்டம்பர் 2 ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஐ.நா. செயலாளர் நாயகம் வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களை சந்திக்கவுள்ளார்.

அதன் பின்னர் நலன்புரி முகாமொன்றிற்கும் செல்லவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உள்ளிட்ட அமைச்சர்கள் சிலரையும், சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் தலைவர்களையும் சந்திக்கவுள்ளார்.

ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனை 2012 ஆம் ஆண்டு முதற்தடவையாக பிரத்தியேக செவ்வியொன்றில் இணைத்துக் கொள்வதற்கு நியூஸ்பெஸ்டிற்கு சந்தர்ப்பம் கிட்டியது.

ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் இரண்டாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

யுத்தம் நிறைவடைந்த போது 2009 ஆம் ஆண்டு முதற்தடவையாக அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்