எஞ்சியவை காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கின்றேன்

எஞ்சியவை காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கின்றேன்

எஞ்சியவை காணாமல் போனோருக்கான அலுவலகத்தினால் மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கின்றேன்

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 6:00 pm

ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் காணாமற்போனோர் பட்டியலில் உள்ளடங்குகின்றனர்.

2010 ஆம் ஆண்டு ஜனவரி 24 ஆம் திகதி காணாமற்போன ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொட தொடர்பில் 5 வருடங்கள் கடந்தும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

அதேபோல், மக்கள் போராட்ட அமைப்பின் உறுப்பினர்களாக குகன் முருகானந்தன் மற்றும் லலித் குமார் வீரராஜ் ஆகியோர் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காணாமற்போனார்கள்.

இந்நிலையில், காணாமற்போனோர் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவிற்கு போதிய காலம் கிடைக்காமையினால் எதிர்பார்த்த விடயங்களை நிறைவேற்ற முடியாமற்போனதாக ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம இன்று நியூஸ்பெஸ்ட்டிற்குத் தெரிவித்தார்.

அவர் தெரிவித்ததாவது,

[quote]எமது ஆணைக்குழுவின் விசாரணைகளின் பின்னர் காணாமற்போனோர் தொடர்பில் அலுவலகமொன்றை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகளின் பேரவை கோரியிருந்தது. அதனை ஸ்தாபிப்பதற்காகவே தற்போது சட்டமொன்று முன்வைக்கப்பட்டு செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் அதிகாரத்தை வடக்கு, கிழக்கு மாத்திரமின்றி ஏனைய பகுதிகளுக்கும் வழங்க வேண்டும் என பேசப்பட்டது. ஆணைக்குழுவின் எஞ்சிய செயற்பாடுகள், காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக இடம்பெறும் என நான் எதிர்பார்க்கின்றேன்.[/quote]

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்