உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக பசில் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக பசில் தெரிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் புதிய சின்னத்தில் களமிறங்கவுள்ளதாக பசில் தெரிவிப்பு

எழுத்தாளர் Bella Dalima

30 Aug, 2016 | 9:35 pm

புதிய சின்னத்தில், புதிய கூட்டமைப்பில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களமிறங்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

திவிநெகும நிதியத்தில் இருந்து 33 மில்லியன் ரூபாவை கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கூரைத்தகடுகளை விநியோகிக்க பயன்படுத்தியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் ஆஜரான பின்னரே அவர் இதனைக் கூறினார்.

திவிநெகும நிதியத்தில் இருந்து 33 மில்லியன் ரூபாவை கூரைத்தகடுகளை விநியோகிக்கப் பயன்படுத்தியமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவின் குற்றப்பத்திரம் தாக்கல் செய்தல் ஒக்டோபர் 19 ஆம் திகதி வரை பிற்போடப்பட்டுள்ளது.

வழக்கின் இரண்டாவது சந்தேக நபரான திவிநெகும திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் கித்சிறி ரணவக்க இன்று மன்றில் ஆஜராகவில்லை.

சுற்றுலா ஊக்குவிப்பு அமைச்சில் இடம்பெற்றுள்ள குளறுபடி தொடர்பில் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன்படி, சந்தேக நபர்கள் நால்வரையும் ஒக்டோபர் 19 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல் நீதிமன்ற நீதிபதி என்.வி கருணாதிலக்க உத்தரவிட்டார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்