வௌிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முற்றாகத்தடை

வௌிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முற்றாகத்தடை

வௌிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முற்றாகத்தடை

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 10:35 am

வௌிநாட்டவர்கள் நாட்டில் மாணிக்கக்கல் அகழ்வதற்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியின் ஆலோசனைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர குறிப்பிட்டுள்ளார்.

சில வௌிநாட்டு நிறுவனங்கள் தற்போது சட்டத்திற்கு புறம்பான வகையில் தங்களின் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவ்வாறான நிறுவனங்கள் தொடர்பில் கண்டறிவதற்கான சுற்றிவளைப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் தலைவர் அசங்க வெலகெதர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்