இலங்கை அணி மீதான லாஹூர் தாக்குதல்; பயங்கரவாதிகள் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழப்பு

இலங்கை அணி மீதான லாஹூர் தாக்குதல்; பயங்கரவாதிகள் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழப்பு

இலங்கை அணி மீதான லாஹூர் தாக்குதல்; பயங்கரவாதிகள் பொலிஸாரின் துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 7:14 pm

2009 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாஹூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணியின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய 4 பயங்கரவாதிகள் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளனர்.

2009 ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி பாகிஸ்தான் லாஹூர் நகரில் நடைபெற்ற இலங்கை – பாகிஸ்தான் அணிக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டத்திற்காக இலங்கை வீரர்கள் மைதானத்திற்கு பஸ்ஸில் சென்று கொண்டிருந்த போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

தாக்குதலில் திலான் சமரவீர் , அஜன்த மென்டிஸ், தரங்க பரணவிதாரன, குமார் சங்கக்கார மற்றும் மஹெல ஜயவர்த்தன ஆகியோர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுடன் தொடர்புடைய நான்கு சந்தேக நபர்கள் லாஹூர் நகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தடுப்பு சுற்றி வலைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கி பிரயொகத்தில் உயிரிழந்துள்ளனர் .

அவர்களுடன் இருந்த மேலும் இரண்டு பயங்கரவாதிகள் தப்பிச் சென்றுள்ளதாக வௌிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.

லஸ்கர் ஈ ஜாங்வி என்ற அமைப்புடன் தொடர்புடைய இவர்கள் பாகிஸ்தானில் இடம் பெற்ற மேலும் பல பயங்கரவாத தாக்குதல்களுடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்