மக்கள் சக்தி 100 நாட்கள் ஊடாக மூன்று செயற்றிட்டங்கள் இன்று மக்களின் பாவனைக்காக கையளிப்பு

மக்கள் சக்தி 100 நாட்கள் ஊடாக மூன்று செயற்றிட்டங்கள் இன்று மக்களின் பாவனைக்காக கையளிப்பு

மக்கள் சக்தி 100 நாட்கள் ஊடாக மூன்று செயற்றிட்டங்கள் இன்று மக்களின் பாவனைக்காக கையளிப்பு

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 2:11 pm

மக்கள் சக்தி 100 நாட்கள் செயற்றிட்டத்தினூடாக மக்களுக்கான மூன்று செயற்றிட்டங்கள் இன்று மக்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளன.

சுத்தமான குடிநீர் இன்றி அல்லலுரும் பலாங்கொடை வெல்லவல தோட்டத்திற்கான குடிநீர் விநியோக திட்டம் இன்று மக்களிடம் கையளிக்கப்பட்டது.

பலாங்கொடை வெல்லவல ஏ, வெல்லவல பீ மற்றும் தியவெல்ல ஆகிய பகுதிகளிலேயே இந்த குடிநீர் திட்டம் இன்று மக்கள் பாவனைக்கு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

பலவருடங்களாக குடிநீர் பிரச்சினையை எதிர்நோக்கிய தமக்கு மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தினூடாக பெற்றுக் கொடுக்கப்பட்ட நீர்விநியோக திட்டம் மக்களுக்கான பாரிதொரு சேவை என வெல்லவல தோட்ட மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இன்றைய நிகழ்வில் வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் உயர் அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.

பலாங்கொட வெல்லவல தோட்ட மக்களுக்கான குடிநீர் விநியோக திட்டம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு நாடலாவிய ரீதியில் மக்களுக்கு தேவையான செயற்றிட்டங்கள் நியூஸ்பெஸ்ட் மக்கள் சக்தி 100 நாட்கள் திட்டத்தினூடாக மேற்கொள்ளப்படுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்