பொகவந்தலாவையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

பொகவந்தலாவையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

பொகவந்தலாவையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளில் நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 2:08 pm

பொகவந்தலாவையில் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளை அடுத்து நுகர்விற்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

சுமார் 40,000 ரூபா பெறுமதியான அரிசி மற்றும் ஏனைய உணவுப் பொருட்கள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பிராந்திய பொதுசுகாதார பரிசோதகர் பி.கே.எல். வசந்த தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை நகரம், டின்சின் நகரம் மற்றும் கெம்பியன் ஆகிய பகுதிகளிலுள்ள சுமார் 18 கடைகளில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, அளவுக்குஅதிகமான இரசாயன பதார்த்தங்களை கலந்த சோஸ் வகையும் பொகவந்தலாவை பகுதியில் கண்டுபிடுக்கப்பட்டுள்ளது.

அரச பகுப்பாய்வினூடாக குறித்த சோஸ் மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதை அடுத்து இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சோஸ் போத்தல்களை தயார் செய்யும் நிறுவனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் பொகவந்தலாவை பிராந்திய பொதுசுகாதார பரிசோதகர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பொகவந்தலாவை உள்ளிட்ட பல பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்ற நெய்மற்றும் தேன்என்பன தரமற்றவகையில் தயார் செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எனவே,குறித்த பகுதிகளில் நெய் மற்றும் தேன் என்பனவற்றை கொள்வனவு செய்யும் போது அவதானத்துடன் செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்