கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை

கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை

கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் விசாரணை

எழுத்தாளர் Staff Writer

28 Aug, 2016 | 10:14 am

கடந்த அரசாங்கத்தின் போது மேற்கொள்ளப்பட்ட மத்திய வங்கி முறிகள் விநியோகம் தொடர்பில் மீண்டும் விசாரணைகளை ஆரம்பிக்க கணக்காய்வாளர் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2009 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் மத்திய வங்கியினால் முன்னெடுக்கப்பட்ட முறிகள் விநியோகம் தொடர்பான கொடுக்கல் வாங்கல் குறித்து விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்கவிடம் நியூஸ்பெஸ்ட் வினவியது..

இந்த விசாரணைகளுக்கு தேவையான ஆவணங்களை வழங்குவதற்கு மத்திய வங்கியின் உத்தியோகஸ்தர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக, கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்