ஹட்டனில் கெப் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி

ஹட்டனில் கெப் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி

ஹட்டனில் கெப் வாகனமும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 7:13 pm

ஹட்டன் வனராஜா தோட்டத் தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டனை நோக்கிச் சென்ற கெப் ஒன்றுடன், புளியாவத்தை பகுதியிலிருந்து நோர்வூட் நோக்கிச் சென்ற முச்சக்கரவண்டி ஒன்று நேருக்கு நேர் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து இடம்பெற்ற இடத்திலேயே முச்சக்கரவண்டியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

கெப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்