புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட  உலகின் வயதான நபர்:  இந்தோனேஷியாவில் வாழ்கிறார் 

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட  உலகின் வயதான நபர்:  இந்தோனேஷியாவில் வாழ்கிறார் 

புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட  உலகின் வயதான நபர்:  இந்தோனேஷியாவில் வாழ்கிறார் 

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 4:05 pm

இந்தோனேஷியாவில் வசித்து வரும் 145 வயதுடைய, உலகின் மிக வயதான நபரைக் கண்டுபிடித்துள்ளனர்.

மஹக் கோதோ என்பவர் 1870 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி பிறந்துள்ளார்.

இவர் இந்தோனேஷியாவின் வயதான நபர் மட்டுமின்றி, உலகின் மிக வயதான மனிதர் என்ற வரிசையிலும் இடம்பிடித்துள்ளார்.
இவருக்கு 4 மனைவிகள், 10 குழந்தைகள் இருந்துள்ளனர். இவரின் மனைவியர் மற்றும் குழந்தைகள் அனைவரும் இறந்துவிட்டனர். கடைசி மகன் 1988 ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.

145 வயது வரை வாழ்ந்துள்ளீர்களே, அதன் இரகசியம் என்னவென்று இந்த முதியவரிடம் கேட்டால், அதற்கு அவர் கூறிய ஒரு வார்த்தை பதில் “பொறுமை”.

”145 வயது கடந்துவிட்டபோதிலும், கல்லறை அப்படியே இருக்கிறது, என்னால் தான் இறக்கமுடியவில்லை,” என கூறியுள்ளார்.

இவரது பேரக்குழந்தைகளில் ஒருவர் கூறியதாவது,

[quote]எனது தாத்தா எப்போதும் ரேடியோ அருகில் அமர்ந்துகொண்டு நாட்டு நடப்புகளைப் பற்றித் தெரிந்துகொள்வார். அவருக்கு கண்பார்வை சரியாகத் தெரியாத காரணத்தால், தொலைக்காட்சி பார்க்க இயலாது. அவரது விருப்பப்படியே அவருக்கு கல்லறை கட்டி வைக்கப்பட்டுள்ளது. தனது வேலைகளை அவராகவே கவனித்துக்கொள்வார். கடந்த 3 மாதங்களாக அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் குளிப்பதற்குக் கூட சிரமப்படுகிறார்[/quote]

என கூறியுள்ளார்.

PAY-Mbah-Gotho-2JPG

Screen-Shot-2016-08-26-at-202124


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்