பிலிமதலாவையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை: சந்தேகநபர்களைத் தேடி விசாரணை

பிலிமதலாவையில் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொலை: சந்தேகநபர்களைத் தேடி விசாரணை

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2016 | 11:30 am

நானுஓயா, பிலிமதலாவை பகுதியில் இளைஞன் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தேடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரே நேற்றிரவு 9.30 அளவில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்திவிட்டு தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியமை தொடர்பான காட்சி சீ.சீ.ரீ.வி. கமராக்களில் பதிவாகியுள்ளன.

30 வயதான இளைஞர் ஒருவரே சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்