நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி ஆரம்பமான பாத யாத்திரையின் 2 ஆம் நாள் பயணம் கிளிநொச்சியில் ஆரம்பம்

நிரந்தர சமாதானத்தை வலியுறுத்தி ஆரம்பமான பாத யாத்திரையின் 2 ஆம் நாள் பயணம் கிளிநொச்சியில் ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2016 | 1:32 pm

இலங்கை மக்கள் சகலருக்கும் நிரந்தர சமாதானம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பாதயாத்திரை, கிளிநொச்சியிலிருந்து இரண்டாம் நாள் பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளது.

கிளிநொச்சியிலிருந்து இன்று காலை 8 மணியளவில் பாதயாத்திரை முன்னெடுக்கப்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

நாட்டு மக்களுக்கு நிரந்தர சமாதானம் கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில், யாழ். நல்லூரில் இருந்து நேற்றைய தினம் இந்த பாதயாத்திரை ஆரம்பமானது.

யாழ். நாக விகாரையில் இடம்பெற்ற விசேட மத அனுஷ்டானங்களின் பின்னர் பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டது.

நல்லூரில் ஆரம்பமான இந்த பாத யாத்திரை எதிர்வரும் 7 அம் திகதி ஹம்பாந்தோட்டையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்