செயலிழந்துள்ள எரிபொருள் குழாய் கட்டமைப்பால் நட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

செயலிழந்துள்ள எரிபொருள் குழாய் கட்டமைப்பால் நட்டத்தில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 5:53 pm

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான, கொழும்பில் இருந்து கொலன்னாவைக்கு எரிபொருள் கொண்டு செல்லும் பிரதான மூன்று குழாய் மார்க்கங்கள் செயலிழந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

கோப் குழுவின் விசாரணை அறிக்கையில் இது தொடர்பான தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் வெளியிடப்பட்ட நிதி அறிக்கைக்கு அமைய, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு 2015 ஆம் ஆண்டில் மாத்திரம் 18,384 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது.

கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் கொண்டு செல்லும் குழாய் மார்க்கக் கட்டமைப்பில் காணப்படும் சிக்கலே, இவ்வாறு நட்டம் ஏற்பட்டமைக்கான மூன்றாவது காரணம் என கோப் குழு அடையாளங்கண்டுள்ளது.

இந்த குழாய்க் கட்டமைப்பு பழமையானது என்பதுடன் சேதமடைந்துள்ளமை நட்டத்திற்கான பிரதான காரணமாகும்.

கொழும்பு நகரத்தின் ஊடாக நிலத்திற்கு கீழ் பயணிக்கும் இந்த குழாய் கட்டமைப்பு பெரும்பாலான இடங்களில் நிலத்திற்கு மேல் காணப்படுகின்றது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்