சக்தி எப்.எம் இன் நல்லூர் நேரலை கலையகம் அங்குரார்ப்பணம்

சக்தி எப்.எம் இன் நல்லூர் நேரலை கலையகம் அங்குரார்ப்பணம்

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 4:34 pm

தமிழ் பேசும் மக்களின் சக்தியான, சக்தி எப்.எம் இன் யாழ். நல்லூர் நேரலை கலையகம் இன்று உத்தியோகப்பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட தமிழரின் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில், இம்முறை சக்தி எப்.எம் இன் நேரலை கலையகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

நாற்சார் வீட்டினை உள்ளடக்கிய கலையகத்துடன் இன்று காலை 6 மணிக்கு சக்தியின் யாழ். நேரலை தனது ஒலிபரப்பை ஆரம்பித்தது.

பிரபல வீணை வாத்தியக்கலைஞர் கலைமாமணி இராஜேஸ் வைத்யா இன்றைய நாளுக்கான சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டிருந்தார்.

காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையானை முழு நிகழ்ச்சிகளும் யாழ். கலையகத்திலிருந்து ஒலிபரப்பப்படவுள்ளமை விசேட அம்சமாகும்.

கலையகத்திற்கு வருகை தருவதன் மூலம் நேயர்கள் தமிழர் பாரம்பரியங்கள் தொடர்பில் அறிந்துகொள்ளவும், சக்தி அலைவரிசையின் நிகழ்ச்சி ஒலிபரப்பு தொடர்பில் தெளிவுறவும் சந்தர்ப்பம் கிட்டவுள்ளது.

இந்த மாதம் 31 ஆம் திகதி வரை நேரலை மக்களுக்கு விருந்தளிக்கவுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்