கருவலகஸ்வெவ பகுதியில் பயணித்த வேன் ஒன்றின் மீது காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கருவலகஸ்வெவ பகுதியில் பயணித்த வேன் ஒன்றின் மீது காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

கருவலகஸ்வெவ பகுதியில் பயணித்த வேன் ஒன்றின் மீது காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

27 Aug, 2016 | 8:39 am

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வேன் ஒன்றின் மீது காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வேன் புத்தளம் – அனுராதபுரம் வீதியின் கருவலகஸ்வெவ பகுதியூடாக பயணித்த போதே காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது.

வேனில் யானை மோதுண்டதை அடுத்து வேன் மீது அந்த யானை தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.

காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 39 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.

கனடா செல்வதற்காக 11 பேருடன் சென்ற வாகனமே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

காயமடைந்தவர்கள் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருந்த சிறுபிள்ளை ஒன்று தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்