கடந்த ஆட்சியை நடத்திச்சென்ற திருட்டுக்கும்பலே இன்று சிறையிலுள்ளது – சஜித் பிரேமதாச

கடந்த ஆட்சியை நடத்திச்சென்ற திருட்டுக்கும்பலே இன்று சிறையிலுள்ளது – சஜித் பிரேமதாச

எழுத்தாளர் Bella Dalima

27 Aug, 2016 | 8:38 pm

அன்னப்பறவைக்கு வாக்களித்தவர்கள் வெலிக்கடை சிறைக்கூடங்களில் ஏன் அடைக்கப்படவில்லை?

இது தொடர்பில், வலஸ்முல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வின்போது, அமைச்சர் சஜித் பிரேமதாச கருத்துத் தெரிவித்தார்.

39 இலட்சம் ரூபா செலவில் வலஸ்முல்ல – நய்வலவத்த கிராமத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாச கலந்துகொண்டிருந்தார்.

இதன்போது, அமைச்சர் பின்வருமாறு கருத்துத் தெரிவித்தார்,

[quote]நல்லாட்சி அரசாங்கத்தை யாரும் விரும்பவில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியுடன் தொடர்புடைய உறுப்பினரொருவர் கூறியுள்ளார். கெட்ட வேலைகளை செய்து தற்போது வெலிக்கடை செல்கின்றார். இந்த நல்லாட்சிக்கு வாக்களித்தவர்களை வெலிக்கடை சிறையில் காண முடியவில்லையாம். உண்மையைக் கூறியமைக்காக நன்றி தெரிவிக்கின்றேன். கடந்த ஆட்சியை நடத்திச் சென்ற திருட்டுக் கும்பலே இன்று சிறையிலுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு வாக்களித்தவர்கள் வெலிக்கடைக்கு செல்வதா? ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களித்தவர்கள் வெளியிலேயே உள்ளனர். உங்களைப் போன்ற சாதாரண மக்கள் இந்த அரசாங்கத்தை உருவாக்கியமையால் தான் இன்று திருடர்கள் மாட்டிக்கொள்கின்றார்கள்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்