750 பேரை சேவையில் இணைக்க தபால் திணைக்களம் தீர்மானம்

750 பேரை சேவையில் இணைக்க தபால் திணைக்களம் தீர்மானம்

750 பேரை சேவையில் இணைக்க தபால் திணைக்களம் தீர்மானம்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2016 | 10:25 am

தபால் ஊழியர்களுக்கு நிலவும் பற்றாக்குறை காரணமாக மேலும் 750 பேரை சேவையில் உள்ளீர்க்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

இதற்காக 350 பேரை சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரோஹண அபேரத்ன தெரிவித்தார்.

சிரேஷ்ட உத்தியோகத்தர்களை உள்ளீர்ப்பதற்கான பரீட்சை அண்மையில் நடத்தப்பட்டதுடன் அந்தப்பரீட்சையில் சித்தியடைந்த 150 பேரை சேவைகளில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் தபால் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

தபால் திணைக்களத்தில் 1600 தபால் ஊழியர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

தபால் ஊழியர்களின் பற்றாக்குறையினால் தபால் சேவை கடந்த காலங்களில் பல சிக்கல்களுக்கும் முகம் கொடுத்திருந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்