வடமாகாண சபையின் 60 ஆவது அமர்வு: ஐந்து பிரேரணைகள் நிறைவேற்றம்

வடமாகாண சபையின் 60 ஆவது அமர்வு: ஐந்து பிரேரணைகள் நிறைவேற்றம்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 7:38 pm

வடமாகாண சபையின் 60 ஆவது அமர்வு இன்று இடம்பெற்றது.

வடமாகாண சபையின் இன்றைய அமர்வில் கொண்டுவரப்பட்ட ஐந்து பிரேரணைகளும் நிறைவேற்றப்பட்டன.

இன்றைய அமர்வில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அமைச்சர்களான பொ.ஐங்கரநேசன், பா.சத்தியலிங்கம் ஆகியோர் சமூகமளித்திருக்கவில்லை.

வடக்கு மாகாணத்தின் பொருளாதாரத்தின் முக்கிய வங்கு வகிப்பது விவசாயமும் மீன்பிடியுமாகும். எனினும், விவசாய நிலங்களில் கட்டடங்கள் நிர்மாணிக்கப்படுவதால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றமை தொடர்பான பிரேரணை வடமாகாண சபை உறுப்பினர் க.சர்வேஸ்வரனால் கொண்டுவரப்பட்டது.

மாகாண சபையின் 45 ஆவது அமர்வில் வடமாகாண சபை உறுப்பினர் அ.பரஞ்சோதியினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமையை அடுத்து, அது தொடர்பில் இன்று மீண்டும் அவதானம் செலுத்தப்பட்டது.

வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்வழங்கல், சுற்றாடல், கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்ற மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோகம் குறித்து எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படாமை தொடர்பான பிரேரணை மீண்டும் இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்