மக்கள் சக்தி: வார இறுதியில் 5 திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன

மக்கள் சக்தி: வார இறுதியில் 5 திட்டங்கள் மக்களிடம் கையளிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 8:40 pm

கிராமங்களில் எவ்வித வசதிகளுமின்றி வாழும் மக்களுக்குத் துணையாய் நிற்கும் வகையில் ”மக்கள் சக்தி, 100 நாட்கள்” செயற்றிட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

அதனடிப்படையில், கடந்த நாட்களில் ஆரம்பிக்கப்பட்ட 05 செயற்றிட்டங்கள் இந்த வார இறுதியில் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பலாங்கொடை, வெல்லவல தோட்டம் உள்ளிட்ட மேலும் 05 பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கியுள்ள குடிநீர்ப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 18 ஆம் திகதி இந்தத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

குறித்த பிரதேச மக்கள் ஒரு நாளில் 04 மணித்தியாலங்கள் குடிநீரைப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருந்த போதிலும் அதனை முறையாக சேமித்து வைப்பதற்குரிய வசதிகளைக் கொண்டிருக்கவில்லை.

இதற்குத் தீர்வாக 05 இடங்களில் நீர்த்தாங்கிகள் அமைப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

இந்தத் திட்டம் எதிர்வரும் 28 ஆம் திகதி மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, வெல்லவல ஏ மற்றும் பீ பிரிவுகளுக்கான நீர்த்திட்டங்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி மக்கள் பாவனைக்காகக் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்