தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக புதிய சட்டங்கள்

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக புதிய சட்டங்கள்

தேர்தல் சட்டங்களை மீறுவோருக்கு எதிராக புதிய சட்டங்கள்

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2016 | 1:42 pm

தேர்தல் சட்டங்களை மீறுவோரை நேரடியாகவே தேர்தல் உத்தியோகத்தர்கள் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும் வகையிலான புதிய சட்டத்தை தயாரிப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தேர்தல் சட்டங்களை செயற்திறன் மிக்கதாக முன்னெடுப்பதற்கு இதன்மூலம் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

நடைமுறையிலுள்ள தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அந்த சட்டங்களை மீறுவோரை பொலிஸாரே கைதுசெய்யவேண்டும்.

அத்தகையவர்களுக்கு வழக்குத் தாக்கல் செய்வதற்காக சட்ட மாஅதிபரின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

புதிய தேர்தல் சட்டத்தை உருவாக்குவதன் ஊடாக தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்ட மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு வழியேற்படும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த புதிய தேர்தல் சட்டத்தை வகுப்பதற்காக, புத்திஜீவிகள் மற்றும் சட்ட வல்லுநர்கள் பலரின் கருத்துகளை பெற்றுக்கொள்ளும் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்