குறைந்தபட்சம் 40,000 ரூபாவாவது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டுமென கூறுகின்றேன்: பிரதமர்

குறைந்தபட்சம் 40,000 ரூபாவாவது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டுமென கூறுகின்றேன்: பிரதமர்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 7:58 pm

ஐக்கிய தேசியக் கட்சிக்கு சொந்தமான புஹாரி ஹோட்டலின் புதிய நிர்வாகக் கட்டிடம் இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், அமைச்சர் கபீம் ஹாசிம் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

கோட்டே – சிறிகொத்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையக வளாகத்தில் இந்த புதிய நிர்வாகக் கட்டிடத் தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்போது, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாவது,

[quote]இந்நாட்டின் உழைக்கும் மக்களை வலுப்படுத்துவதே எமது தேவை. தற்போது எமது நாட்டைச் சேர்ந்த சுமார் 15 இலட்சம் பேர் அளவில் 300 டொலர்களை சம்பாதிக்க சவுதி அரேபியா சென்றுள்ளனர். ஏனையவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் சென்றுள்ளனர். 300 டொலர்களை உழைப்பதற்காக செல்கின்றனர். 300 டொலர்கள் இலங்கையில் கிடைப்பதில்லை. அதனால்தான் குறைந்தபட்சம் 40,000 ரூபாவாவது அடிப்படை சம்பளமாக இருக்க வேண்டுமென நான் எவ்வேளையிலும் கூறுகின்றேன். எனவே, நாம் அதற்காக செயலாற்றுவோம்.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்