மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை நீக்குக: கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்

மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை நீக்குக: கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்

மாணவர்கள் மீதான வகுப்புத்தடையை நீக்குக: கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகம்

எழுத்தாளர் Bella Dalima

25 Aug, 2016 | 5:03 pm

கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 28 பேர் மீதான வகுப்புத்தடையை நீக்குமாறு கோரி, மாணவர்கள் இன்று காலை முதல் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான மற்றும் முகாமைத்துவ பீடங்களைச் சேர்ந்த 28 மாணவர்கள் பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வகுப்புத்தடைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆயினும், இந்த வகுப்புத்தடை நியாயமற்றது எனக்கூறி பல்கலைக்கழக மாணவர்கள் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

பல்கலைக்கழக ஒழுக்க விதிகளை மீறியும் சீரான நிர்வாகத்திற்கு இடையூறாகவும் செயற்பட்டமைக்காக சம்பந்தப்பட்ட மாணவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதற்கமைய, நிர்வாகத்தினருடன் மாணவர் பிரதிநிதிகள் பல தடவைகள் கலந்துரையாடிய போதிலும், 28 மாணவர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வகுப்புத்தடை அடுத்த இரண்டு மாதங்களுக்கு முழுமையாக அமுல்படுத்தப்படும் என பல்கலைக்கழக நிர்வாகம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தங்களின் கோரிக்கைகளுக்கு நிரந்தரத்தீர்வு கிடைக்கும் வரை தங்களின் போராட்டம் தொடரும் என பல்கலைக்கழக மாணவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்