கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கைகளை இணையத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை

கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கைகளை இணையத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை

கணக்காய்வாளர் திணைக்கள அறிக்கைகளை இணையத்தளத்தில் பதிவேற்ற நடவடிக்கை

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2016 | 10:34 am

கணக்காய்வாளர் திணைக்களத்தின் அனைத்து விசாரணைகளுக்குமான அறிக்கைகளை, திணைக்கள இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

www.auditor general.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் விசாரணை அறிக்கைகளை பெற்றுக்கொள்ள முடியுமென கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜேசிங்க குறிப்பிட்டார்.

சகல விசாரணை அறிக்கைகளும் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், உடனடியாக இணையத்தளத்திலும் பதிவேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.

இதன்பிரகாரம் கணக்காய்வாளர் திணைக்களத்தின் சகல அறிக்கைகளையும் பதிவிறக்கம் செய்வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அரசாங்கத்தினால் அண்மையில் நிறைவேற்றப்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்திற்கு அனுகூலமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்திற்கு அமைவாக 2014 ஆம் ஆண்டிலிருந்தும், அதற்கு முன்னைய நான்கு வருடங்களினதும் வருடாந்த கணக்காய்வு அறிக்கைகள் இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படவுள்ளன.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்