இந்திய வெள்ளத்தில் 300 இற்கும் மேற்பட்டோர் பலி

இந்திய வெள்ளத்தில் 300 இற்கும் மேற்பட்டோர் பலி

இந்திய வெள்ளத்தில் 300 இற்கும் மேற்பட்டோர் பலி

எழுத்தாளர் Staff Writer

25 Aug, 2016 | 12:25 pm

வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் ஏற்பட்டுள்ள கடுமையான பருவமழை வெள்ளம் காரணமாக 300 இற்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பீகார் மற்றும் இந்தியாவின் கிழக்கு பகுதி நகரங்களில் கங்கை நதியின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது எனவும் 24 இலட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லாயிரக்கணக்கான மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால் தங்களது வீட்டை விட்டு வெளியேற விரும்பாதவர்களை பேரழிவு நிவாரண அதிகாரிகள் படகுகளில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்