80,000 சிகரெட்டுக்களுடன் பெண்கள் இருவர் விமானநிலையத்தில் கைது

80,000 சிகரெட்டுக்களுடன் பெண்கள் இருவர் விமானநிலையத்தில் கைது

80,000 சிகரெட்டுக்களுடன் பெண்கள் இருவர் விமானநிலையத்தில் கைது

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2016 | 1:52 pm

டுபாயிலிருந்து நாட்டிற்கு வருகை தந்த இரண்டு பெண்களிடமிருந்து 80,000 சிகரெட்டுக்களை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

பெண்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை டுபாயிலிருந்து வந்த இலங்கையை சேர்ந்த இரண்டு பெண்களிடமிருந்து 28 இலட்சம் பெறுமதியான 80,000 சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

4 பயணப்பபைகளில் இருந்தே குறித்த சிகரெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த இரண்டு பெண்களும் ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இரண்டு பெண்களுடன் இலங்கைக்கு வருகை தந்த மேலும் ஒரு ஆணும் கைது செய்யப்பட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்