தமது பூர்வீகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக திரியாய் கிராம மக்கள் கவலை

தமது பூர்வீகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக திரியாய் கிராம மக்கள் கவலை

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 8:16 pm

திருகோணமலை – திரியாய் கிராமத்திலுள்ள தமது பூர்வீகக் காணிகள் ஆக்கிரமிக்கப்படுவதாக மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவில் திரியாய் கிராமம் அமைந்துள்ளது.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையால் நீண்டகாலமாக தாம் வசித்துவந்த காணிகளையும் விவசாய நிலங்களையும் கைவிட்டுச்செல்ல நேரிட்டதாக திரியாய் மக்கள் குறிப்பிட்டனர்.

முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களில் தற்காலிகமாகத் தங்கியிருந்து மீண்டும் திரியாய் கிராமத்திற்குத் திரும்பிய தமக்கு ஏமாற்றமே எஞ்சியதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், தமது 300 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலம் அரச காணி என தெரிவிக்கப்பட்டு வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக திரியாய் மக்கள் குறிப்பிட்டனர்.

அசாதாரண சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆவணங்களை இழந்த தமக்கு இந்தக் காணிகளுக்கான உரிமையைக் கோர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்