காசல்ரீ பிரதேசத்தில் மண்மேட்டுடன் மரம் முறிந்து வீழ்ந்ததில் வாகனப் போக்குவரத்து பாதிப்பு

காசல்ரீ பிரதேசத்தில் மண்மேட்டுடன் மரம் முறிந்து வீழ்ந்ததில் வாகனப் போக்குவரத்து பாதிப்பு

காசல்ரீ பிரதேசத்தில் மண்மேட்டுடன் மரம் முறிந்து வீழ்ந்ததில் வாகனப் போக்குவரத்து பாதிப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2016 | 7:31 am

அதிக மழை காரணமாக ஹட்டன் காசல்ரீ பிரதேசத்தில் மண்மேட்டுடன் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.

ஹட்டன் – நோட்டன் பிரிஜ் மற்றும் லக்ஸபான வீதியிலே நேற்று மதியம் குறித்த மண்மேடு வீழ்ந்துள்ளது.

நேற்று முன்தினம் தொடக்கம் ஹட்டன் பகுதியில் அதிக மழையுடனான வானிலை நிலவி வருகின்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

தற்போது மண்மேட்டின் ஒரு பகுதி அப்புறப்படுத்தப்பட்டுள்ளதுடன் வாகன போக்குவரத்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருந்த போதும் காசல்ரீ கடைவீதி பகுதிக்கு தற்போது மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்