ககுல்கடுவ, ரதம்பலாக கிராம மக்களின் வேண்டுகோளை செவிமடுத்த ”மக்கள் சக்தி”

ககுல்கடுவ, ரதம்பலாக கிராம மக்களின் வேண்டுகோளை செவிமடுத்த ”மக்கள் சக்தி”

ககுல்கடுவ, ரதம்பலாக கிராம மக்களின் வேண்டுகோளை செவிமடுத்த ”மக்கள் சக்தி”

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 8:05 pm

பல்வேறு துன்பங்களுக்கு மத்தியில் வாழும் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது.

சுமார் 30 வருடங்களாக புனரமைக்கப்படாத மாத்தறை, கலேவெல மற்றும் பலாகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள உஸ்ஸான பாலம், மழைக்காலங்களில் மக்களின் உயிர்களைக் காவுகொள்ளும் ஒரு பாலமாக அமைந்துள்ளது.

உஸ்ஸான மக்கள் தம்மால் இயன்றளவு இந்தப் பாலத்தை புனரமைத்த போதிலும், மழைக்காலங்களில் பாலம் மேலும் சேதமடைகின்றது.

மழையுடன் ஹெவென்எல்ல ஓயா பெருக்கெடுக்கும் போது, களுகலத், புலநெவத் கிராம மக்கள் இருமருங்கிலும் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதேவேளை, ஹம்பேகமுவ – ரதம்பலாக மவடமட கதன் பாலமும் அண்மையில் பெய்த மழையின் பின்னர் முற்றாக சேதமடைந்துள்ளது.

ககுல்கடுவ மற்றும் ரதம்பலாக கிராம மக்களின் வேண்டுகோளை செவிமடுத்த ”மக்கள் சக்தி 100 நாட்கள்” திட்டக்குழுவினர் இந்தப் பாலங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்