இறப்பர், தெங்கு, தேயிலைக்கு உர மானியம் வழங்குவதற்கான காணி வரையறை அதிகரிப்பு

இறப்பர், தெங்கு, தேயிலைக்கு உர மானியம் வழங்குவதற்கான காணி வரையறை அதிகரிப்பு

இறப்பர், தெங்கு, தேயிலைக்கு உர மானியம் வழங்குவதற்கான காணி வரையறை அதிகரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 5:38 pm

இறப்பர், தெங்கு செய்கை மற்றும் தேயிலைக்கான உர மானியம் வழங்குவதற்காக அனுமதிக்கப்பட்ட ஒரு ஹெக்டெயர் என்ற காணி வரையறை 2 ஹெக்டெயர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமைச்சர் நவீன் திசாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன் மூலம் அதிகளவிலான இறப்பர் செய்கையாளர்கள் நன்மையடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஒரு ஹெக்டெயர் தேயிலைக்காக 15,000 ரூபாவும் ஒரு ஹெக்டெயர் தெங்கு செய்கைக்காக 9000 ரூபாவும் இறப்பருக்காக 5000 ரூபாவும் வருடாந்த செய்கை மதிப்பீட்டின் அடிப்படையில் உர மானியமாக செய்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்