இத்தாலியில் கடுமையான நில அதிர்வு; 10 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் கடுமையான நில அதிர்வு; 10 பேர் உயிரிழப்பு

இத்தாலியில் கடுமையான நில அதிர்வு; 10 பேர் உயிரிழப்பு

எழுத்தாளர் Staff Writer

24 Aug, 2016 | 12:40 pm

இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள பெருஜியா நகரத்தில் இன்று அதிகாலை 3.36 மணியளவில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.

இதனால் அந்த நகர மக்கள் அலறியடித்தபடி தமது வீடுகளை விட்டு வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

இதற்கிடையே அமாட்ரிஸ் நகரில் பெரும்பாலான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின. வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் இருளில் தவித்தனர். பூகம்பத்தில் பாதைகளில் பிளவு ஏற்பட்டது.

இதனால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டதுடன் உயிர் பிழைக்க ஓடிய மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

அமாட்ரிஸ் நகரில் 6.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் சர்வே மையம் தெரிவித்துள்ளது.

பெருஜியாவில் இருந்து தென்கிழக்கே 76 கி.மீட்டர் தூரத்தில் பூமிக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

இன்று ஏற்பட்ட பூகம்பத்தால் ஆங்காங்கே பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே அமாட்ரிஸ் நகரின் பாதி பகுதி முற்றிலும் அழிந்து விட்டது. ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து தரை மட்டமாகின. இத்தகவலை அமாட்ரிஸ் நகர மேயர் செர்ஜியோ பிரோஷ்ஷி தெரிவித்துள்ளார்.

நகரில் எங்கு பார்த்தாலும் இடிபாடுகளாக காட்சியளிக்கிறது. அதில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி தவிக்கின்றனர். பாதைகள், பாலங்கள் இடிந்ததால் மீட்பு குழுவினர் உடனடியாக வருவதில் சிக்கல் ஏற்பட்டமையால். எனவே, காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல முடியத நிலையே அங்கு காணப்பட்டது.

இப்பாரிய பூமியதிர்வு காரணமாக 10 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் மீட்புபணிகள் தொடர்ந்து இடம்பெறுவதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை உயரும் அபாயம் உள்ளது.

அமாட்ரிஸ் நகரம் மலைகள் சூழ்ந்துள்ள பகுதி. எனவே பூகம்பத்தின் போது நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் மண் மற்றும் பாதைகள் வீடுகளின் மீது சூழ்ந்து கிடப்பதாகவும் அவற்றை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று ஏற்பட்ட பூகம்பத்தால் தலைநகர் ரோம் உள்ளிட்ட பகுதிகளில் அதிர்வுகள் உணரப்பட்டன. இதற்கு முன்பு இத்தாலியில் கடந்த 2009 ஆம் ஆண்டில் அகுய்லா பகுதியில் 6.3 ரிக்டரில் பூகம்பம் ஏற்பட்டது. அப்போது 300 பேர் பலியாகினர்.

2012 ஆம் ஆண்டு மே மாதம் எமிலியா ரொமாக்னா பகுதியில் 10 நாட்கள் தொடர்ந்து ஏற்பட்ட நில நடுக்கத்தில் 23 பேர் உயிரிழந்தனர் 14,000 பேர் வீடுகளை இழந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்