இடைக்கால கொடுப்பனவு வழங்கக் கோரி தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இடைக்கால கொடுப்பனவு வழங்கக் கோரி தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

இடைக்கால கொடுப்பனவு வழங்கக் கோரி தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு

எழுத்தாளர் Bella Dalima

24 Aug, 2016 | 8:37 pm

2500 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு கோரி தலவாக்கலை சென்கூம்ஸ் தோட்டத் தொழிலாளர்கள் இன்று பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்

இந்த கொடுப்பனவு இரண்டு மாதங்களாகத் தமக்குக் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து தொழிலாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக எமது பிராந்திய செய்தியாளர்கள் குறிப்பிட்டனர்.

இதுகுறித்து தோட்ட நிர்வாகிகளிடம் பல தடவைகள் வினவியபோதிலும், உரிய பதில் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் சுட்டிக்காட்டினர்.

தொழிற்சாலையின் வாயிலை இடைமறித்து தோட்டத் தொழிலாளர்கள் இன்று ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்றிருந்த தேயிலை ஆராய்ச்சி நிலையப் பொறுப்பாளரால் வழங்கப்பட்ட வாக்குறுதியை அடுத்து தொழிலாளர்கள் தங்களின் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டுள்ளனர்.

ஒரு மாதத்திற்கான 2,500 ரூபாவைப் பெற்றுத்தருவதாகவும் மிகுதி கொடுப்பனவை இரண்டு வாரங்களுக்குள் பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாகவும் தொழிலாளர்களுக்கு வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்