ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் இருவர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் இருவர் நியமனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் இருவர் நியமனம்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 7:18 pm

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய அமைப்பாளர்கள் இருவர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றுக் கொண்டனர்.

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாத்தறை மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த பதவியை வகித்த பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும இராஜினாமா செய்தமையை அடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹோமாகம தொகுதி அமைப்பாளராக மேல் மாகாண சபையின் அமைச்சர் காமினி திலகசிரி நியமிக்கப்பட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்த பதவி விலகுவதாக நேற்று (21) அறிவித்ததன் பின்னர் காமினி திலகசிறி நியமிக்கப்பட்டுள்ளார்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்