வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய  சந்தேகநபரின் விளக்கமறியல்  நீடிப்பு

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய  சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய  சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 7:42 pm

புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் தாயாரை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதவான் இ.சபேசன் முன்னிலையில் ஆஜர்ப்படுத்திய போது சந்தேகநபரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த வழக்குத் தவணையின் போது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்துமூல பிணை விண்ணப்பம் தொடர்பில் பரிசீலனை செய்யுமாறு இதன் போது பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர்.

எவ்வாறாயினும், அடுத்த தவணையின் போது ஊர்காவற்துறை நீதவான் அதுகுறித்து பரிசீலித்து கட்டளை பிறப்பிப்பார் என பதில் நீதவான் அறிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மற்றுமொரு பெண் விளக்கமறியலில் உயிரிழந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்