நிலக்கரி கொள்வனவு முறைகேடுகளை மறைக்க சில அதிகாரிகள் முயற்சி:  சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

நிலக்கரி கொள்வனவு முறைகேடுகளை மறைக்க சில அதிகாரிகள் முயற்சி: சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

நிலக்கரி கொள்வனவு முறைகேடுகளை மறைக்க சில அதிகாரிகள் முயற்சி: சிவில் அமைப்புக்கள் குற்றச்சாட்டு

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 8:37 pm

நிலக்கரி கொடுக்கல் வாங்கலில் இடம்பெற்ற முறைகேடுகளை மறைத்து அந்தகொடுக்கல் வாங்கல்கள் நாட்டிற்கு சாதகமாக அமைந்துள்ளதாக எடுத்தியம்புவதற்காக சில அதிகாரிகள் முயற்சிப்பதாக சிவில் அமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

அவசர கொள்வனவை விடவும் சாதகமான முறையில் நீண்டகாலத்திற்கான விலை மனு கோரல் அடிப்படையில் நிலக்கரி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட இன்று ஆங்கில நாளேடொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

செப்டெம்பர் மாதமளவில் மேலும் 330,000 மெற்றிக்தொன் நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

இந்த கொள்வனவிற்கான அனுமதியும் வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுரேன் பட்டகொட கூறியுள்ளார்.

நீண்டகால விலை மனு வழங்கப்பட்டுள்ள சுவீஸ் சிங்கபூர் நிறுவனத்திடமிருந்து நிலக்கரியை கொள்வனவு செய்வதன் மூலம் பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கும் என சுரேன் பட்டகொட இன்று டெய்லி நியூஸ் பத்திரிகைக்கு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிறுவனத்திடமிருந்து 58 டொலர்களுக்கு ஒரு மெற்றிக் தொன் நிலக்கரியை கொள்வனவு செய்ய முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவசர கொள்வனவு அடிப்படையில் செயற்பட்டால் ஒரு மெற்றிக் தொன் நிலக்கரிக்காக 64.7 டொலர்களை செலுத்த நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் பிரகாரம் நீண்டகால விலை மனு அடிப்படையில் நிலக்கரியை கொள்வனவு செய்வதன் மூலம் ஒரு மெற்றிக் தொன் நிலக்கரிக்காக ஏழு டொலர் இலாபம் கிடைக்கும் என கலாநிதி சுரேன் பட்டகொட குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த விலை விபரங்கள் மக்களை தவறாக வழிநடத்துவதாக சிவில் அமைப்புக்கள் குற்றம் சுமத்துகின்றன.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்