நாமல் ராஜபக்ஸவிற்கு பிணை

நாமல் ராஜபக்ஸவிற்கு பிணை

நாமல் ராஜபக்ஸவிற்கு பிணை

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 1:19 pm

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவிற்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.

தனியார் நிறுவனமொன்றில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கடந்த 15 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

பொலிஸ் நிதி குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட அவரை, விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை அடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்