தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களினூடாக நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வருமானம்

தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களினூடாக நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வருமானம்

தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களினூடாக நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வருமானம்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 11:11 am

தேசிய வனங்கள் மற்றும் பூங்காக்களினூடாக நாளொன்றுக்கு 20 மில்லியன் ரூபா வருமானம் கிடைப்பதாக வனஜீவிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த வருட இறுதிக்குள் இந்த தொகையை 23 மில்லியன்களாக அதிகரிக்க எதிர்பார்த்துள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரெரா தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தேசிய வனங்களை பார்வையிடுவதற்கு அதிகளவில் வருகை தருகின்றமையே இந்த வருமான அதிகரிப்புக்கு காரணம் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன் ஊடாக நாட்டிற்கு பாரிய வருமானத்தை ஈட்டிக் கொடுக்கும் துறையாக இந்த துறை மாற்றமடைவதாகவும் வனஜீவராசிகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரெரா கூறியுள்ளார்.

எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்