தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம்

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம்

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பம்

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 12:12 pm

தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இன்று ஆரம்பமாகின்றது.

இதன் நிமித்தம் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் பாலித மஹிபால குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய சிற்றுண்டி சாலைகள் உணவகங்கள் வெதுப்பகங்கள் உணவு விடுதிகள் மற்றும் நெடுந்துர பஸ் சேவைகளின் போது தேநீர் போஜனத்திற்கு பஸ்கள் நிறுத்தப்படும் இடங்கள் என்பன சுற்றிவளைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நுகர்வோர் அதிகார சபையினரும் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது ஒன்றிணைந்து செயற்படவுள்ளனர்.

மேலும் மென்பான உற்பத்திகள் சட்ட ரீதியாக மெற்கொள்ளப்படுகின்றதா என்பது தொடர்பிலும்
இதன்போது பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சட்டங்களை மீறும் வியாபாரிகள் மற்றும் உணவு உற்பத்தியாளர்களுக்கு, எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டொக்டர் பாலித மஹிபால தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்