சாலாவ வெடிப்பு; மேலதிக நட்டஈடு கோரியவர்களுக்கு விரைவில் நட்டஈடு

சாலாவ வெடிப்பு; மேலதிக நட்டஈடு கோரியவர்களுக்கு விரைவில் நட்டஈடு

சாலாவ வெடிப்பு; மேலதிக நட்டஈடு கோரியவர்களுக்கு விரைவில் நட்டஈடு

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 1:33 pm

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட நட்டஈடு போதுமானது அல்லவென மேன்முறையீடு செய்தோருக்கான நட்டஈட்டை செலுத்தும் நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பிக்கப்படவுள்ளது.

சுமார் 650 பேர் இவ்வாறு முறைப்பாடு செய்துள்ளதாக கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கல குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மேன்முறையீடுகளுக்கு அமைய நில அளவை திணைக்களத்தினரின் உதவியுடன் அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டமை அடுத்து நட்டஈடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் 700 வீடுகளுக்கான நட்டஈடு தற்போது வழங்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர தெரிவித்துள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்