ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 1:24 pm

ஐந்து அம்ச கோரிக்கையை முன்வைத்து கிளிநொச்சியில் இன்று கவனயீர்ப்பு பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் இந்த பேரணி முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி – உமையாள்புரம் அம்மன் கோவில் வளாகத்தில் காலை 8 மணியளவில் இந்த பேரணி ஆரம்பிக்கப்பட்டது.

உமையாள்புரம் பகுதியில் ஆரம்பமான பேரணி கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள ஐ.நா. செயலகம் வரை முன்னெடுக்கப்பட்டது.

அதனையடுத்து கிளிநொச்சியிலுள்ள ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான அலுவலகத்தில் கோரிக்கைகளடங்கிய மகஜர் சமர்ப்பிக்கப்பட்டது.

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும், போர்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை வேண்டும் மற்றும் இராணுவ வசமுள்ள காணிகளை விடுவித்தல் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து இந்த கவனயீர்ப்பு பேரணி முன்னெடுக்கப்பட்டது.

பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், கிளிநொச்சி மாவட்ட பொது அமைப்புக்கள், கிராம மட்ட அமைப்புக்கள், காணாமல் போனவர்களின் உறவுகள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும், அத்துமீறிய குடியேற்றத்தை தடுக்குமாறும், மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்துமாறு இதன்போது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்