அம்பாறையில் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

அம்பாறையில் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

அம்பாறையில் 2008, 2009 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் ஒருவர் கைது

எழுத்தாளர் Staff Writer

22 Aug, 2016 | 8:13 pm

கடந்த 2008 மற்றும் 2009 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் அம்பாறையில் இடம்பெற்ற கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதற்கமைய சம்பவம் தொடர்பில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.

சம்பவம் தொடர்பில் நேற்று முந்தினம் (20) கைது செய்யப்பட்ட முதலாவது சந்தேகநபரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நேற்று (21) மாலை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ஏனைய 3 சந்தேகநபர்களும் 24 மணித்தியால தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், அவர்களை நாளைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

குறித்த கடத்தல் சம்பவங்கள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளின் அடிப்படையில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடத்தப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
அம்பாறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்