நாம் பின்வாங்கப்போவதில்லை: ஊடக சந்திப்பில் மஹிந்த யாப்பா, டலஸ் அழகப்பெரும

நாம் பின்வாங்கப்போவதில்லை: ஊடக சந்திப்பில் மஹிந்த யாப்பா, டலஸ் அழகப்பெரும

எழுத்தாளர் Bella Dalima

20 Aug, 2016 | 8:08 pm

டலஸ் அழகப்பெரும மற்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன ஆகிய ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பிரதிநிதிகள் இன்று மாத்தறையில் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஊடக சந்திப்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்ததாவது,

[quote]மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற அந்தக் கூட்டத்திற்கும், அங்கு ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டிற்கும் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற ரீதியல் நாம் கடும் எதிர்ப்பைத் தெரிவிக்கின்றோம்.[/quote]

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்ததாவது,

[quote]கடந்த பாராளுமன்றத் தேர்தல் காலப்பகுதியில் மக்களுக்கு வழங்கிய தேர்தல் வாக்குறுதிகளைப் பாதுகாப்பதற்கு நாம் முன்நிற்கின்றோம். தேசிய அரசாங்கத்திற்காக நாம் முன்நிற்போம் என அதில் எங்கும் குறிப்பிடவில்லை. ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாத்திரமே அரசாங்கத்தை அமைக்க வேண்டுமென்று அதில் கூறப்பட்டுள்ளது. அந்தக் கொள்கையை மீறுவோருடன் இணைய முடியாது. அவ்வாறு செய்ய முடியாது. எந்த ரூபத்தில் தடையேற்படுத்தினாலும், அச்சுறுத்தினாலும் நாம் பின்வாங்கப்போவதில்லை.[/quote]

 

 


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்